Friday, 28 April 2017

மின்சாரத்தைச் சேமிக்க...

மின்சாரத்தைச் சேமிக்க...

மின்சாரம் சேமிப்பு:
இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இதோ சில யோசனைகள் , இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சொல்லவில்லை, பின்பற்றினால் நன்றாக இருக்கும் :)

கிச்சனில் மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகள்:

குளிர்சாதனப்பெட்டி:Refrigerator:

ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.
· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.
· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.
· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.
· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.
· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.
· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.
· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.
· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.


குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.

· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.

· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்.

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-part2

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?





முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.
முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!
மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).
ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.
ஒகேய், வாட் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமா?

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?


ஆமாம் இந்த வாட் ஓம் ஆம்பியர் வோல்ட் இதெல்லாம் என்ன? இதை பத்தி தெரிஞ்சுக்கனும்னா கூகிலாண்டவர்கிட்ட கேட்டாப் போதும் பக்கம் பக்கமா லிஸ்ட் தருவார். ஆனா எதுலயும் நேரடியான விளக்கம் இருக்காது, சுத்தி வளச்சுத்தான் சொல்லி இருப்பாங்க எல்லாரும். நானும் அப்படித்தான் சொல்லப் போறேன். இது உங்களுக்கு பயனுள்ள பதிலா இருக்கானு நீங்கதான் சொல்லனும். :(

இதோ ஒரு சிம்பிளான பதில்:

மின் கடதிகள் எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் மின்மூலக்கூறுகளால்(movable charges) ஆனது. மின்னொட்டம்(current) என்பது இந்த மின் மூலகூறுகள் ஓடுவதால் ஏற்படுவது. மின்னழுத்தம்(வோல்ட்) இந்த ஒத்த மின்மூலக்கூறுகளை ஒரிடதிலிருந்து இன்னொரு இடதிற்க்கு தள்ளும் வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு மின்கடதியும்(conductor) ஒரு குறிப்பிட்ட்ட அளவு தடையை இந்த மின்மூலக்கூறுகளின் ஓட்டதிற்க்கு அளிக்கிறது. இந்த தடையை(Resistance) மீறி மின்னூட்டங்கள்(charges) நகர்வதால் கடத்தியில் வெப்பம் உண்டாகிறது.
எவ்வளவு மின்மூலக்கூறுகள் ஒரு நொடியில் நகர்கின்றன எனப்தை ஆம்பியர்(Amepre என்ற அலகால் அளக்கிறோம். அந்த நேரத்தில் பரிமாறப்படும் மின்சக்தியானது வாட்(Watt) என்றும், மின்தடை ஓம் (ohm) என்றும் அளக்கபடுகிறது. ஆம்ப்பியர், வோல்ட், வாட், ஓம் ம் சிம்ப்பிள்த்னே. இன்னும் கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?



மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?







இந்த படம் ஒரு ஜெனரேட்டருடன் இனைந்த மின் விளக்கை காட்டுகிறது.



மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?



இதுக்கு பதில் சொல்லனும்னா, உங்க வீடல இருக்கிற குண்டு மின்விளக்கை எடுத்துக்குவோம்(Bulb). அந்த மின்விளக்கை இனைக்கும் கடத்தியில்(Wire) மின்னூட்டங்கள்(Electrons) உக்காந்துட்டு முன்னோக்கியும் பின்னாடியும் அலஞ்சிட்டு இருக்கும். படத்தைப் பார்க்கவும். அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) . அதே நேரத்தில் மின்கந்தப் புலத்தால்(Elecromagnetic field) உருவான மின்காந்த அலைகள்(Electro magnetic waves) வேகமாக கட்த்தியில் முன்னேரிச் செல்லும். இந்த அலையில் உள்ள சக்தியானது(Energy) முன்னும் பின்னும் அலையாது, ஆனால் அது கடத்தி வழியாக ஓடி மினியற்றியில் இருந்து விளக்கிற்கு பாயும்.



சரி, இப்ப இந்த கேள்விய நீங்களே கேட்டுப் பாருங்க: மின்னோட்டம் (current) தான் மின்சாரமா(electricicty)?,

அப்படியெனில் நாம் மின்சாரம் கடத்தியின் உள்ளெ உக்காந்து கொண்டு முன்னும் பின்னும் ஓடிகொண்டிருகிறது.

அடுத்து இந்த கோணத்தில் பாருங்கள் அதை ஒரு ஆற்றலின் வடிவாக? . மின்சார்ம் என்பதை மின்னாற்றலாக எடுத்துக் கொண்டால் அது முன்னும் பின்னும் அலைய முடியாது கடத்தியினுள்ளே, அதற்க்கு பதிலாக அது மின்காந்த புலத்தை தோற்றுவித்து முன்னோக்கி ஓடுகிறது.



ஆனால் மேலே சொன்ன இரண்டையும் ஒரெ நேரத்தில் செய்கிறதா? அப்படியெனில்



எது மின்சாரம்?

* முன்னும் பின்னும் அலையும் எலக்ட்ரான்களா?

இல்லை

*மிக வேகமா மின்காந்தபுல ஆற்றலா?

- புததகங்களில் தேடினால் முரனாண விளக்கங்கள்தான் உள்ளன.

யாராவது ஜெனரேட்டர் தான் மின்சாரதை உருவாக்குகிறதா என்றால்? மின்னியல் பற்றி நாம் தவறான கோனத்தில் இருக்கிரோம் என்று அர்த்தம்.



இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மின்னியல் என்பது மிகஎளிதானதே.பொதுவாக மின்சாரம் என்பதை பலரும் எப்படிச் சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்....? அதுல எது சரினு நினக்கிறீர்களே அதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அதுல் ஒன்னுதான் சரி மற்ற எல்லாம் தவறு.விஞ்ஞானிகள், தினசரி வாழ்க்கையில், பள்ளி அறிவியல் புத்தகத்தில் எல்லாம் இந்த மின்சாரத்திற்கு கொடுக்கும் வரையறைகள் என்னனு பாக்கலாமா?

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-



600 BC:- பழங்கால கிரேக்கர்கள் ஆம்பரை(amber) கம்பளியில்
தேய்த்து நிலை மின்னூட்டதைக் கண்டறிந்தார்கள்
Crica 0AD:- (இந்த ஆண்டு பற்றி எனக்கு சரியாக
தெரியவிலை):- பாரசீகர்கள் (இப்ப இருக்கும்
ஈராக்) மின்கலத்தை(Battery) கண்டறிந்தார்கள்
( எதற்க்கு என்று தெரியவில்லை மருத்துவத்தில்
பயன்படுத்தி இருக்கலாம் என்ன அனுமானம்)


1720 ல்:- ஸ்டீபன் கிரெ(Stephen Gray) என்பவர் நிலை
மின்னூட்டங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு
இடத்திற்கு கடத்தமுடியும் என நிரூபித்தார்


1750 ல்:- பெஞ்ஜமின் பிராங்க்ளின் அவர்க்ளின் ஒரு Fluid
theory of Electricity மின்னியலின் ஆறிவியல்
பூர்வமான செயல்முறைகளை ஒருமுகப்படுதியது.
இதுவே புதிய மின்னியல் அடிப்படைக் கொள்கைகள்
உருவாக அடித்தளம் அமைத்தது.


1800ல்:- அலெஸ்ஸான்ட்ரோ வொல்டா அருடைய புதிய
கண்டுபிடிப்பாக மின்கலத்தை மீண்டும்
பாரசீகர்களுக்கு பின் 1800 ஆண்டுகள் களித்து
அறிமுகப்படுதினார்.


1820ல்:- ஹான்ஸ் ஓர்ஸ்டட் மின்காந்த தன்மையை
தன்னுடைய பிரபலமான "காம்பஸ்(Compus) மற்றும்
மின்சாரம் பாயும் கடத்தி"(current carying wire)
சோதனை மூலம் கண்டறிந்தார்.


ஆண்ட்ரு -மேரி ஆம்பியர் மின்சாரம் மற்றும்
மின்காந்தம் இவற்ரை வரையறை செய்தார்.
மேலும் மின்னோட்ட்டத்தை அளவிடும் "அம்மீட்டர்"
என்னும் கருவியையும் கண்டறிந்தார்.


ஜார்ஜ் ஓம் மின்சாரம் பறிய ஆய்வுகளை
வெளியிட்டார், அதில் அவரது புகழ் பெற்ற
ஓம்'ன் விதி (Ohm's law) யும் அடக்கம்.


1830ல்:- மைக்கெல் பாராடெ ஆட்டத்தில் இறன்கினார். மனித
குலதின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த நவீன
மின்னிய்ல் யுகம் தொடங்கியது....!

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?


இதோ எளிமையான பதில் இரண்டு முக்கியமானவை ஒரு கடத்தியின்(conductor) வழியே பாயும்.
அவை,
1.மின்னூட்டம் (eletric charge)
2.மின் சக்தி(Electrical Energy)

இதனுடன் சேர்ந்து வேறு சிலவும் கடத்தியில் பாயும், இப்பொதைக்கு எளிமையாக்க அதையேல்லாம் தவிர்த்து விடுவோம்.இரண்டு பொருள்கள் கடத்தியில் ஓடுகின்றது, இரண்டையுமே நாம் மின்சாரம் என அழைக்க முடியாது. இதயே காரணம் காட்டி அப்ப மின்சாரம்னா என்ன? அப்படினும் கேட்க கூடாது. அதற்க்கு பதிலாக

1. எந்த பொருள் பல்பி(bulb)னுள் கடத்தி வழியாகச் சென்று மீண்டும் வெளியே வருகிறது?

2. எந்த பொருள் பல்பினுள் சென்று ஒளி(light)யாக மாறுகிறது?

முதல் கேள்விக்கு பதில் #1 மின்னூட்டம் (Electric Charge).

மின்னூட்டம் என்பது பல்பின் வழியாக மின்சுற்றில்(circuit) பாயும் ஒரு பொருள். பொதுவாக இந்த செயலின் போது ஒரு மின் சுற்றில் மின்னுட்டம் இழப்பதுமில்லை, அதெ போல் மின்னுட்டம் பெறப்படுவதும் இல்லை. மேலும் மின்னூட்டம் மிக மெதுவாகப் பாயும், இன்னமும் சில நேரங்களில் கடத்தியில் ஓடாமல் ஒரே இடத்தில் இருக்கும். மாறுதிசை மின்னோட்ட மின்சுற்றில் மின்னூட்டம் முன்னோக்கி பாயாது. கடத்தியினுள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கேள்விக்கு பதில் # மின்சக்தி (Electric energy)

இதயே மின் காந்த சக்தி எனவும் அழைக்கலாம்.(Electro magnetic energy). இந்த சக்தியானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாயும். மிக வேகமாகச் செல்லக் கூடியது. சற்றேரக்குறைய ஒளியின் வேகத்தில் செல்லும். இதை ஒரு மின்சுற்றிலிருந்து ஆக்கவும் முடியும், இல்லை வேறு வடிவில் தொலைக்கவும் முடியும். அதாவது மின்விளக்கு கொண்ட மின் சுற்றில்(Circuit) மின்சக்த்தியானது ஒளி மற்றும் வெப்பமாக மாற்றப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரண்டுக்குமான வித்தியாசம்

மின்னூட்டம்(Electric charge)---------------------------------------------------------மின்சக்தி(Electro magnetic energy)

1)மிக மெதுவாகச் செல்லும். சில நேரங்களில் நின்று விடும் ------- எப்பொழுதும் வேகமாகச் செல்லும், ஒளியின் வேகத்திற்க்கு நிகராக.

2)இதன் ஓட்டம் மின்னோடாம்(electric current) எனப்படும்.ஆம்பியர்(Ampere) என்னும் அலகால்(Unit) அளக்கப் படுகிறது. -------
இதன் ஓட்டம் மின்சத்தி எனப்படுகிறது. வாட்(Watt) என்னும் அலகால் அளக்கப்படுகிறது

3)பல்பின் வழியாகப் பாய்ந்து செல்வது -------
பல்பினால் உபயொகப்படுத்தப் படுகிறது(அதாவாது ஒளியாக மாற்றப் படுகிறது.)

4)ஆடலோட்ட(AC) மின் சுற்றில் முன்னும் பின்னுமாக ஓடும். .-------ஆடலோட்ட(AC) மின் சுற்றில் தொடர்ந்து முன்னோக்கி பாயும்.

5)உலோகங்களில் இருந்து பெறப்படுகிறது. ---------
மின் இயற்றி(Generators), மின் கலம்(Battery)இவற்றிலிருந்து பெறப்படுகிறது.

6)இது ஒரு பொருளின் அடிப்படைத்துகள் ---------
இது ஒரு வகையான ஆற்றல்.

7)அடிப்படை துகள் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும். --------
இதன் அடிப்படை போட்டான்கள்(Photons) ஆகும்.

8)கடத்தியின் உள்ளே பாய்ந்து செல்வது -------
கடத்தியினைச் சுற்றியுள்ள வெளியில் பயனம் செய்வது.

9)சுழல் ஓட்டம்(Circular flow)ஒரு மின்சுற்றில் சுற்றிச் சுற்றி வரும் - --------
ஒரு முனை ஓட்டம்(one way flow)மின் மூலத்திலிருந்து(source) மின்சுமை(Load) நோக்கி பாயும்.
10) இயற்கையாகவே இருப்பது ---------
மின்சாரக் கம்பெனிகளால் உருவாக்கி விற்கப் படுவது.

11) பழைய விஞ்ஞானிகள் இதை மின்சாரம்(Electricity) என்றார்கள். ----------
புதிய முதலாலிகள இதை மின்சாரம் என்கிறார்கள்